செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

அரசு மருத்துவர் உருவாக்கிய பலூன் உபகரணம்

மீண்டும் மீண்டும் துளையிட தேவையில்லை; அதிக காயம் ஏற்படாது


நுண்துளை அறுவை சிகிச்சையில் வயிற்றுக்குள் கருவிகளை செலுத்த


அரசு மருத்துவர் உருவாக்கிய பலூன் உபகரணம்




வயிற்றுப் பகுதியில் நுண்துளை மூலம் அறுவைச் சிகிச்சை செய் வதற்கான கருவிகளை உட்செலுத்துவதற்குப் பயன் படும் நவீன உபகரணத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவர் வடிவமைத்துள்ளார்.

வயிற்றுப் பகுதியில் நுண்துளை அறு வைச் கிசிக்சை செய்வதற்கு உள்உறுப்பு களைத் துண்டித்தல், உள்ளிருக்கும் திர வத்தை உறிஞ்சி எடுத்தல், உறுப்புகளை விலக்கிப் பார்த்தல் போன்ற செயல்களுக்கு பலவிதமான நவீன கருவிகள் பயன்படுத் தப்பட்டு வருகின்றன.

இத்தகைய கருவிகளை வயிற்றில் தனித்தனியே துளையிட்டு உட்செலுத்தி, ஒரே நேரத்தில் இயக்கி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்தக் கருவி களை நேரடியாக பயன்படுத்தாமல், ஒவ்வொரு துளையிலும் ஒரு உபகரணம் வீதம் பொருத்தப்பட்டு, அதன் வழியே தான் அந்தந்தக் கருவிகள் உட்செலுத்தப்படும்.

இந்த உபகரணங்கள் தோல் பகுதியில் போதிய பிடிப்பின்றி இருப்பதால் அடிக்கடி அசைவு ஏற்படும். அப்போது, வயிற்றைப் பெரிதாக்குவதற்காக செலுத்தப்பட்ட காற்று (ஆக்சிஜன்) வெளி யேறுவதால், வயிற்றுப் பகுதி சுருங்கும்.

மேலும், அசைவால் துளை பெரிதாகி, அந்த உபகரணமே கீழே விழுந்துவிடும். அத்தகைய சந்தர்ப்பங்களில், மீண்டும் அதே இடத்தில் அந்த உபகரணத்தை வைக்க முடி யாது என்பதால் வேறு இடத்தில் துளையிட வேண்டும். இதனால் அறுவைச் சிகிச்சையில் தாமதம் ஏற்படும்.

இத்தகைய சிரமங்களைத் தவிர்க்கும் விதத்திலான புதிய உபகரணத்தை புதுக் கோட்டை சுகாதார துணை இயக்குநரும் (காசநோய்), அறுவைச் சிகிச்சை அரசு மருத் துவருமான எம்.பெரியசாமி வடிவமைத்து உள்ளார். இதுகுறித்து மருத்துவர் எம். பெரியசாமி கூறியதாவது:

“நுண்துளை அறுவைச் சிகிச்சையின் போது பிடிமானமற்ற ட்ரோ கார் கேனுலா (Trocar Cannula) 
எனும் உபகரணத்தின் வழியே தான் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், அசைவின் மூலம் ஒரு உபகரணத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தவேண்டியிருப்பதால் காயம் அதிகமாகிவிடுகிறது. இதைத் தடுப்பதற்காக, ட்ரோகார் கேனுலா உப கரணத்தில் வயிற்றுக்குள் செல்லக்கூடிய 10 செ.மீ நீளமுள்ள குழாய் வடிவிலான பகுதியில் 10 மி.லி அளவில் காற்று நிரப் பக்கூடிய பலூன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த உபகரணம் வயிற்றுக்குள் செலுத் தப்பட்டதும் அந்த பலூனில் காற்று நிரம்பி விடும். அந்த பலூனை அடுத்துள்ள உபகரணம் அறுவைச் சிகிச்சையின்போது பிடுங்கிக்கொண்டு வெளியே வராது. உள்ளிருக்கும் காற்றையும் வெளியேற விடாது.

மேலும், அறுவைச் சிகிச்சை முடிந்த தும் உபகரணத்தில் பொருத் தப்பட்டுள்ள பலூனில் இருந்து பைலட் பலூன் வழியாக காற்றை வெளியேற்றிவிட்டு உபகரணத்தை எளிதில் அகற்றிவிடலாம். இதனால் குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய் வதோடு, அதிக காயம் வர வாய்ப்பில்லை.

இந்த உபகரணத்தின் பயன் பாடு குறித்து மருத்துவர்கள் மாநாட்டின் மூலம் அறிந்துகொண்ட மருத்துவ ஆராய்ச்சியா ளர்களும் வரவேற்றுள்ளனர். இந்த உப கரணத்துக்கு பெரிஸ் லேப்ராஸ் கோப்பிக் ட்ரோகார் கேனுலா' என பெயரிடப்பட்டு உள்ளது என்றார்.

- நன்றி: இந்து தமிழ், 13.12.2018

- விடுதலை ஞாயிறு மலர், 12.1.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக