வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

சிறந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள்: 9ஆவது இடத்தில் இந்தியா



சென்னை, ஜன.27  உலக அளவில், அரசு நிதியில் இயங்கக் கூடிய சிறந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 9 ஆவது இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது என மத்திய அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற் றத்துக்கான அமைச்சர்  அர்ச வர்தன் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை அய்அய்டி-யில் மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையின் ரூ. 16 கோடி நிதியுதவியுடன் சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் சேமித்தல் மையம், கழிவுநீர் மேலாண்மை, சூரியசக்தி தெர்மல் உப்பு அகற்றுதல்  மய்யம் என மூன்று மய்யங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இந்த மய்யங்களை, அய்அய்டி வளா கத்தில் வெள்ளிக் கிழமை நடை பெற்ற விழாவில் பங்கேற்று திறந்துவைத்த அமைச் சர் அர்சவர்தன் பேசியதாவது:

அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா சிறந்து விளங்கி வருகிறது. அய்அய்டி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அண்மையில் வெளியிடப் பட்ட புள்ளி விவரத்தின் படி, உலக அளவில் அரசு நிதியுதவி யில் இயங்கி வரும் சிறந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங் களைக் கொண்ட நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா, ஜெர் மனி போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக 9ஆவது இடத் தில் இந்தியா உள்ளது.

அதாவது உலகம் முழுவதும் அரசு நிதியுதவியில் இயங்கும் 1207 அறிவியல் ஆராய்ச்சி நிறு வனங்கள் உள்ளன. இதில் இந்தியாவின் சி.எஸ்.அய்.ஆர். (அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில்) 9 ஆவது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் தனியார் அறிவியல் ஆராய்ச்சி நிறுனங்களின் (5200 நிறுவனங்கள்) பட்டியலில் சி.எஸ்.அய்.ஆர். 75 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

அதுபோல, சிறந்த அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளி யிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆம் இடம் வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

-  விடுதலை நாளேடு, 27.1.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக