வியாழன், 10 ஜனவரி, 2019

காட்சியோடு வாசம் காட்டும் மெய்நிகர் தொழில்நுட்பம்முப்பரிமாண மாய உலகத்தைக் காட்டும் மெய்நிகர் தொழில்நுட்பம், இதுவரை கண்களுக்கு மட்டுமே விருந் தளித்து வந்தது. இனி, இத்துடன், ‘பீல் ரியல்’ முகமூடியை அணிந்து கொண்டால், கண்களில் தெரியும் காட்சிக்கு ஏற்ப, பலவித வாசனைகளையும் பார்வையாளர் உணரலாம்.

பீல் ரியல் முகமூடிக்குள் ஒன்பது வாசனைகளுக்கான குமிழ்கள் உள்ளன. இவற்றை காட்சி சூழலுக்கு ஏற்றபடி பீய்ச்சியடிப்பதன் மூலம், 255 விதமான வாசனைகள், நாற்றங்களை பார்வையா ளரின் மூக்கிற்கு அனுப்பலாம்.

காபியின் கமகம மணம், லாவண்டரின் நறுமணம் முதல் சாலையில் டயர் உராய்ந்து ஏற்படும் வாடை, ஏன், துப் பாக்கி மருந்து எரியும் நாற்றம் உள்ளிட்ட பல வாடைகளை, பீல் ரியலின் முக மூடியால் வேண்டிய நேரத்தில் உருவாக்க முடியும்.

‘மூக்கிற்கு மட்டுமல்ல, மற்ற புலன் களுக்கும் தேவையான உணர்வுகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம்‘ என, பீல் ரியலின் வடிவமைப்பாளர்கள்

தெரிவித்துள்ளனர்.

உதாரணத்திற்கு, மெய்நிகர் காட்சியில் பனி இருந்தால், பார்வையாளரின் முகமூடிக்குள் ஜில்லென்ற காற்று வீசும். தீப்பிடிக்கும் காட்சி என்றால் வெப்பக் காற்று முகமூடிக்குள் வீச, பார்வையாளர், தீயிற்கு அருகே இருப்பது போல உணர்வார்.

தற்போது உள்ள மெய்நிகர் விளை யாட்டுகளை உருவாக்கியவர்கள், இனி பீல் ரியல் முகமூடியின் வாசனைகளை தூண்டும்படியான மென்பொருள்களை எழுதலாம் என்கின்றனர். இதன் மூலம் அந்த விளையாட்டுகள், கண்களுக்கு மட்டுமல்லாமல் மூக்கு, தோல் உள்ளிட்ட பிற புலன்களுக்கும், நடப்பவை நிஜம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்த முடியும்.

தற்போது, பிரபலமாக உள்ள மெய் நிகர் கருவிகளான, ஆக்குலஸ் ரிப்ட், சாம்சங் கியர் வி.ஆர்., - எச்.டி.சி., வைவ், பிளே ஸ்டேஷன் வி.ஆர் போன்ற வற்றுடன், பீல் ரியல் முகமூடியும் சேர்ந்து இயங்கும் திறன் கொண்டது.

-  விடுதலை நாளேடு, 10.1.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக