வியாழன், 14 டிசம்பர், 2017

பறக்கும் திறன் கொண்ட டைனோசரின் முட்டைகள்!


சீனாவின் வட மேற்கிலுள்ள ஜின்ஜியாங் மாகா ணத்தில், 300 பெட்ரோசர் வகை டைனோசர்களின் முட்டைகள், கல்லாகிய நிலையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. பல வகை டைனோசர்களில், பறக்கும் திறன் கொண்ட பெட் ரோசர் வகை டைனோசர்களின் இயல்புகள் பற்றி,  வல்லுநர்கள் மத்தியில் சர்ச்சைகள் இருந்தன. 2004ஆம் ஆண்டில் தான், அவை முட்டையிடும் வகை என்பதற்கு ஆதாரங்கள், தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்தன.

கடந்த, 10 ஆண்டுகளாக ஜின்ஜியாங் பகுதியில், தொல்லியல் ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு, பெரும் பாறைகளுக்கிடையே கல்லாகிய நிலையில் இருந்த முட்டைகள் கிடைத்தது, மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. கல்லாகிய நிலையில் இருந்த முட்டைகளை, ‘சி.டி., ஸ்கேன்’ மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, அந்த முட்டைகளுக்குள் கபாலம், சில கை, கால் எலும்புகள் உருவாகத் துவங்கிய நிலையில் இருந்த பெட்ரோசர் வகை டைனோசர்களின் உருவம் தெரிந்தது. மேலும், 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பெட்ரோசர்கள் குழுவாக முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வழக்கம் கொண்டவையாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.

- விடுதலை நாளேடு, 14.12.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக