வியாழன், 13 நவம்பர், 2014

அணுசக்தி - புள்ளி விவரங்கள்

அணுசக்தி இன்று வரை - புள்ளி விவரங்கள்

லகின் அசுரத்தனமான மின்சாரப்பசிக்கு அணுசக்தியே மிகச் சிறந்த மாற்றாக இருக்கும் என்பது அறிவியல் உலகின் நம்பிக்கை. ஆனால் அணு உலை ஆபத்து என்கிற முழக்க மும் எழத் தவறவில்லை. அணுசக்தி அன்று முதல் சமீபம் வரை எப்படி இருக்கிறது என்பதை சொல்லும் புள்ளி விவரங்கள் உங்களுக்காக...
* ஆட்டம் எனும் ஆங்கிலச் சொல் கிரேக்கச் சொல்லான அட்டோமாஸ் என்பதிலிருந்து வந்தது. இதற்கு 'பிளக்க முடியாது' எனப் பொருளாகும்.
* எல்லாப் பொருளுக்கும் ஆதாரமாயிருப்பது கண்ணுக்கு புலப்படாத அணுக்களே என்று முதலில் விவரித்தவர் கிரேக்க தத்துவஞானி டெமாகிரிட்டஸ் (கி.மு.460-கி.மு.370) ஆவார்.
* ஒவ்வொரு தனிமமும் மேற்கொண்டு உடைக்க முடியாத மிகச் சிறிய துகள்களால் ஆனது என்றும் அவற்றை அணுக்கள் என்றும் வரையறுத்தவர் பிரிட்டிஷ் வேதியியலாளர் ஜான் டால்டன் (1766-1844) ஆவார்.
* சர் ஜான் ஜோசப் தாம்சன் (1856-1940) என்ற ஆங்கிலேய இயற்பியல் அறிஞர் எதிர்மின் கதிர்கள் மிக விரைவாகச் செல்லும் துகள்கள் என்பதைக் கண்டறிந்தார். இக்கதிர் மின் மற்றும் காந்தப் புலங்களால் விலக்க மடைவதையும் இந்தத் துகள் அணுத்துகளை விட 2000 மடங்கு குறைந்த நிறை உடையது என்பதையும் கண்ட றிந்தார். இந்தத் துகளே பின்னர் மின்னணு எனப்பட்டது. இவர் ஒளியின் தொடர்ச்சியின்மைக் கொள்கையை வெளியிட்டார். அணுவைப் பற்றிய இவரது இந்த கண்டு பிடிப்பு அணுசக்தி வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
* அய்ன்ஸ்டீன் வகுத்த நிறை மற்றும் ஆற்றல் தொடர்பான சிறப்பு சார்பியல் கொள்கை (1905), பொதுச் சார்பியல் கொள்கை (1915) ஆகியவை அணுசக்திக்கு அடிப்படையாக அமைந்தன.
* அணுவிலுள்ள அணுக் கருவை ஆல்ஃபா கதிர்களைக் கொண்டு பிளவுபடுத்த முடியும் என்று 1919இல் எர்னஸ்ட் ரூதர் ஃபோர்ட் என்ற இங்கிலாந்து இயற்பியலாளர் கண்டுபிடித்தார்.
* சாதாரண ஹைட்ரஜன் தவிர மற்ற ஒவ்வொரு அணுக் கருவிலும் காணப்படும் ஒரு முக்கியத் துகள் 'நியூட்ரான்' ஆகும். இதை 1932இல் ஜேம்ஸ் சாட்விக் (1891-1974) கண்டுபிடித்தார். இது அணுசக்தி மற்றும் அணுகுண்டு வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
* 1930களின் ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் அணு எலக்ட்ரான்களோடு புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான் துகள்களைக் கொண்டது என்பதைக் கண்டு பிடித்தார்கள்.
* 1942இல் என்ரிக்கோ ஃபெர்மி என்ற அமெரிக்க இயற்பியலாளர் நியூட்ரான்களால் தூண்டப்பட்ட கதிரியக் கத்தைக் கண்டுபிடித்தார்.
* யுரேனியத்தில் உள்ள கதிரியக்கத்தை ஏ.ஹெச். பெக்கரல் என்பவர் கண்டுபிடித்தார். அணுசக்தி உற்பத்திக்கு யுரேனியம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 50,000 டன் யுரேனியம் மூலம் 25 டன் அணு உலை எரிபொருள் கிடைக்கும். இது 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணுமின் நிலையத்தின் ஓராண்டு தேவையாகும்.
* விரல் நுனியளவுள்ள யுரேனியம் 481.38 கனமீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயு சக்தியையும் 807.4 கிலோ நிலக்கரி அல்லது 564 லிட்டர் எண்ணெயின் சக்தியையும் கொண்டது.
* 1789இல் ஒரு தனிமமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட யுரேனியத்திற்கு அப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட (1781) யுரேனஸ் என்ற கோளின் ஒபயர் சூட்டப்பட்டது.
* அணுக்கருப் பிளவு முறையை ராணுவம் பயன் படுத்துவது பற்றி ஆராய்ந்த அமெரிக்க அரசின் மன் ஹாட்டன் திட்டத்தின்படி முதல் அணுகுண்டு தெற்கு மெக்ஸிகோவின் ராணுவ விமான தளத்தில் 1945 ஜூலை 16இல் சோதனை செய்து வெடிக்கப்பட்டது.
* இரண்டாம் உலகப்போரின் இறுதி நாட்களில் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஜப்பானில் உள்ள ஹிரோ ஷிமா நகரின் மீது 'லிட்டில் பாய்' என்று பெயரிடப்பட்ட அணு குண்டு அமெரிக்காவால் போடப்பட்டது. இதுவே உலகில் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான முதல் நகரம்.
* 1945 ஆகஸ்ட் 9இல் 'ஃபேட் மேன்' என்று பெயரிடப்பட்ட மற்றொரு அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரின் மீது போடப்பட்டது.
* இன்று உலகில் இரண்டு டஜன் நாடுகள் அணுசக்தியை உபயோகிக்கின்றன. இதில் ஒன்பது நாடுகளில் மட்டும் அணு ஆயுதங்கள் உள்ளன. இவை அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் மட்டுமே 95 சதவீத அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுதங் களை உற்பத்தி செய்த முதல் நாடு அமெரிக்காவாகும். அணு ஆயுதத்தை போரில் பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா.
* 2013 நிலவரப்படி 17,300 அணு ஆயுதங்கள் உலகத்தில் உள்ளன. ரஷ்யா 8500, அமெரிக்கா 7700, பிரான்ஸ் 300, சீனா 250, பிரிட்டன் 225, இந்தியா 100, பாகிஸ்தான் 100, இஸ்ரேல் 80, வடகொரியா சுமார் 10 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன.
* பிரிட்டனில்   அணு மின் நிலையம் எலிசபெத் ராணியால் 1956 அக்டோபர் 17 ல் துவக்கி வைக்கப்பட்டு 24 கி.மீ தொலைவில் உள்ள வெகிங்டன் என்ற நகருக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதுவே உலகில் அணுசக்தி மின்சாரம் பெற்ற முதல் நகராகும்.
* 1996லிருந்து 2009 வரை உலகில் 49 புதிய அணு உலைகள் துவக்கப்பட்டன. 43 பழைய உலைகள் மூடப்பட்டன.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக