சனி, 1 நவம்பர், 2014

ஒளிமறைவு (கிரகணம்) என்றால் என்ன?

ஒளிமறைவு (கிரகணம்) என்றால் என்ன?

புவியும் நிலவும் சூரியனிடமிருந்து தான் ஒளியைப் பெறுகின்றன. அவ்வாறு புவியும் நிலவும் பெறுகின்ற சூரியஒளியைப் புவியோ அல்லது நிலவோ தடுக்கும் போது ஒளிமறைவு  (கிரகணம்) ஏற்படுகின்றது. இத்தகைய ஒளிமறைவைத்தான் நாம் கிரகணம் என  அழைக்கிறோம். இந்நிகழ்ச்சியை ஒரு எடுத்துக் காட்டுடன் நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். காலை அல்லது மாலை வேளைகளில் சூரியனை நோக்கி நில்லுங்கள். அப்பொழுது உங்கள் நிழல் உங்களுக்குப் பின்னால் விழு வதைப் பார்க்கலாம். மற்றொருவரை உங்களுக்குப் பின்னால் உங்கள் நிழலில் நிற்கச் சொல்லுங்கள். அவர் மீது உங்கள்நிழல் படிந்திருக்கும். அவ்வாறு நிற்பவரின் மீது சூரிய ஒளி விழாமல் உங்கள் நிழல் தடுக்கிறது. உங்கள் நிழலில்நிற்பவரை நிழலிலிருந்து விலகி நிற்கச் சொல்லுங்கள், இப்பொழுது சூரிய ஒளி இருவர் மீதும் சமமாக விழுகிறது.
அது போலவே சூரியனுக்கு நேராக வரும் பொழுது புவியின் நிழலும், நிலவின் நிழலும் விண்வெளியில் விழுகின்றன. புவியின் நிழலில் நிலவு வரும் பொழுது அல்லது நிலவின் நிழலில் புவி வரும் பொழுது ஒளிமறைவு நிகழ்ச்சி (கிரகணம்) ஏற்படுகிறது.
ஒளிமறைவு நிகழ்ச்சி (கிரகணம்) எல்லா பவுர்ணமி, அமாவாசை நாட் களிலும் நிகழ்வதில்லை. ஏன்? நிலவு, புவியை வலம் வரும் பாதையின் கோணம், புவி, சூரியனை வலம் வரும் பாதைக் கோணத்தை விட 5 பாகை (டிகிரி) சாய்வாக உள்ளது. எனவே பெரும்பாலும் நிலவு புவியின் நிழல் விழும் பகுதிக்கு அப்பால் சென்று விடுகிறது.அது போலவே புவியும் நிலவின் நிழல் விழும் பகுதிக்கு அப்பால் சென்று விடுகிறது. அவற்றின் சுழலும் காலவேறுபாட்டினால் எதிர் பாராத ஒரு சூழ்நிலையில் புவியானது, நிலவின் நிழல் விழும் பகுதியிலும், நிலவானது, புவியின் நிழல் விழும் பகுதியிலும் வந்து விடுகின்றன.
அவ்வேளைகளில் சூரியன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து விடுகின்றன. ஆதலால் இவை மூன்றின் அமைவிடங் களைப் பொறுத்து கிரகணம் என்னும் ஒளிமறைவு நிகழ்வு ஏற்படுகிறது. சந்திரன் ஒளிமறைவு (கிரகணம்) சந்திர  நிகழ்வு ஏற்பட கீழ்க்கண்ட சூழல்கள் உருவாக வேண்டும்.
1. சூரியன், புவி மற்றும் நிலவு ஆகியவை மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமைய வேண்டும்.
2. நிலவுக்கும், சூரியனுக்கும் இடை யில் புவி அமைய வேண்டும்.
3. முழுநிலவாகக் காட்சியளிக்கும் பவுர்ணமி இரவாக இருத்தல் அவசியம். இவையே உண்மையான காரணங் களாகும். ஆன்மீகவாதிகள் கூறும் காரணங்கள் பொய்யானவை. அவற் றிற்கு எந்த நிரூபிப்பும் இல்லை.
-விடுதலை நாளேடு 18.10.14

Read more: http://www.viduthalai.in/page-1/89483.html#ixzz3HoqGsX1P

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக