திங்கள், 24 நவம்பர், 2014

மொழியறிவால் மூளை கூர்மையாகும்

 

ஒரு மொழியை மட்டுமே பேசுபவர் களைக் காட்டிலும் இரு மொழிகளைப் பேசுபவர்களின் தகவல்பரிமாற்றம் திறனுள்ளதாக இருப்பதாக அண்மையில் வெளியான ஆய்வுத்தகவல் கூறுகிறது.
நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் ஹோஸ்டன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் ஒரு மொழி பேசுபவர்களைவிட இரண்டு மொழி பேசுபவர்களுக்கு புரிதல் திறன் அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஒரு மொழிக்கும் மேலாக பேசுபவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, தேவை யற்ற சொற்களைத் தவிர்த்து பேசுவதையும், அவர்களின் மூளை அதே பணியை முடிக்க  கூடுதலாக பணிசெய்வதாகவும் செயல் பாட்டு காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல் (functional magnetic resonance imaging -FMRI) முறையில் ஆய்வை மேற் கொண்டு கண்டறிந்துள்ளனர்.
உலகின் மாபெரும் மருத்துவம் மற்றும் அறிவியல் நூல்களுக்கான பதிப்பகமாக உள்ள எல்வெவியர் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரக்கூடிய  மொழிக்கான நரம்பு உயிரியல் இதழான மூளை மற்றும் மொழி இதழ் (The journal Brain and Language) இந்த ஆய்வுத்தகவலை வெளியிட்டுள்ளது.
மூளையின் இருவேறு செயல்களான செயல்படுதலும், செயல்பாட்டைத் தடுத் தலும் ஆகிய இருவகை செயல்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்துகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கேட்கும்போதுசரியானதை தேர்வு செய்து கேட்கச் செய்கிறது.
ஆய்வாளர்கள் இரண்டு மொழிகளை (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ்) பேசக் கூடியவர்களான  17பேரையும், ஒரே மொழியை மட்டுமே அறிந்து பேசக்கூடிய 18 பேரையும் தேர்வு செய்து ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வில் இரு மொழியில் ஆற்றல் உள்ளவர்களின் மூளை தேவையற்ற சொற்களை தாமாகவே நீக்கிக்கொள்வதையும் கண்டறிந்தனர்.
உதாரணத்துக்கு கிளவுட் என்கிற சொல்லை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் களைக் கேட்கச்செய்தபோது, உடனடியாக திரையில் மூளையின் செயல்களைக் காட்டும் நான்கு படங்கள் தோன்றின. அதேபோன்று அதே ஒலி அமைப்புடன் உள்ள கிளவுன் எனும் சொல்லைக் கேட் கும்படி செய்யப்பட்டது. இதன் நோக்கம் என்னவெனில், சரியான சொல்லுடன் மூளை எவ்வளவு விரைவாக தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது என்று கண் காணிப்பதே ஆகும். இந்த ஆய்வின்போது, இரு மொழி அறிந்தவர்கள் விரைவாக சரியாக செயல்பட்டார்கள்.
முடிவானது கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்பதுபோல்  தோன்றுகிறது. இரண்டு மொழியில் திறன் உள்ளவர்கள் இரண்டு மொழிகளிலும் திறனுள்ளவர்களாக இருப்பதால் சரியானவகையில் பணிகளை முடிப்பதில் வல்லவர்களாக அல்லது மற்ற வர்களைவிட அதிக புரிதல் அறிவுடன் பல மொழிகளைக் கற்றவர்களாக  இருப்பதால் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருக் கிறார்களா? என்றால், இரண்டும் சேர்ந்த கலவையாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆய்வாளர்கள் ஆய்விலிருந்து கண்ட றிந்துள்ளது என்னவெனில், மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்க வேண்டும் எனும்போது, சுடோகு போன்ற குழப்பத்தி லிருந்து  (Puzzle)
விடுவிப்பதற்குப் பதிலாக, புதிதாக ஒரு மொழியை ஏன் அளிக்கக் கூடாது? மூளைக்கு சவாலாக அதைத் தவிர வேறு உண்டா? என்று ஆய்வாளர்கள் கேட்கிறார்கள்.
விடுதலை,சனி, 22 நவம்பர் 2014


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக