புதன், 21 அக்டோபர், 2026

உலகம் உருவான விதம்


இந்த உலகம் எப்படி தோன்றியது என்று கேட்டால், "ஆளாளுக்கு ஒரு கதை சொல்வார்கள். அறிவியல் என்ன சொங்கிறது என்று பார்ப்போமா...

உயிருள்ளவை, உயிரற்றவை என்ற இரண்டு பிரிவுகள் உலகில் உள்ளன. இவை அனைத்தும் உருவாக காரணமாக இருந்தது, பிளாஸ்மா குழம்புதான். இது வெறும் உள்ளங்கை அளவே பந்து போன்று இருந்தது. பின்னர், அழுத்தம் தாங்காமல் வெடித்துச் சிதறியது.

வெடிப்பிற்கு பின், அதில் இருந்து பொருள்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற அணுத்துகள்கள் உருவானது. நட்சத்திரங்களும் தோன்றின. ஆரம்பத்தில் இவற்றில் எலக்ட்ரான்களும், புரோட்டான்களும் மட்டுமே இருந்தன.

கடும் வெப்பத்திலும், அழுத்தத்திலும் அணுச் சேர்க்கை நடைபெற்றன. இதனால், ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற தனிமங்கள் உருவானது. தொடர்ந்து, லித்தியம், போரான், பெரிலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவை உருவானது.

சில நட்சத்திரங்கள் துண்டுகளாக சிதறி, தூரத்தில் போய் விழுந்து குளிரத் தொடங்கின. அவை இறுதியில் கோள்களாக உருமாறின. அப்படிப்பட்ட ஒரு கோள் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி.

பால்வீதி மண்டலம்

பல நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து கேலக்சிகளாக மாறின. இந்த பிரபஞ்சத்தில் பல கேலக்சிகள் உள்ளன. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கேலக்சிக்கு 'பால்வீதி மண்டலம் என்று பெயர். இதில் பல கோடி நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சூரியன்.

எல்லா நட்சத்திரங்களின் மையத்திலும் அணுச் சேர்க்கை நடக்கின்றன. அதனால், அவற்றில் இருந்து வெப்பமும், ஒளியும் வெளிவருகின்றன. சூரியனிலும் இதுபோன்ற செயல் நடைபெறுவதால்தான் அது அதிக வெப்பத்துடனும், ஒளிபிழம்பாகவும் உள்ளது.

கனமான பொருட்கள் தங்களை நோக்கிப் பிற பொருட்களை கவர்ந்து இழுக்கின்றன. இதனால், கனம் குறைந்த பொருட்கள் அவற்றை சுற்றத் தொடங்குகின்றன. எட்டு கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. பூமியின் துணைக்கோளாக சந்திரன் உள்ளது. இது பூமியை சுற்றி வருகிறது. நாம் பவுர்ணமி அன்று நிலவு ஒளி பிரகாசமாக இருப்பதைப் பார்க்கலாம். சந்திரனுக்கு என்று அப்படி தனியாக ஒளி எதுவும் கிடையாது. சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்று பூமியை நோக்கி பிரதிபலிப்பதால் தான் இந்த ஒளி நமக்குக் கிடைக்கிறது.

சூரியன், பூமி, சந்திரன் போன்ற கோள்கள் அனைத்தும் கோள வடிவில் உள்ளன. பூமி 23% டிகிரி சாய்ந்த அச்சில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. ஒரு பாதி சூரியனை நோக்கி இருக்கும் போது அந்தப் பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது. இதுதான் பகல். அதே சமயம் மறுபகுதி இருளில் உள்ளது. அதுதான் இரவு, இப்படி ஒரு முறை பூமி சூரியனை சுற்றி முடிக்க 24 மணி நேரம் ஆகிறது. இதுதான் நமக்கு ஒரு நாளாகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 1/4 நாட்கள் ஆகின்றன.

பூமியின் இருப்பிடம்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது நாம் வாழ்வ தற்கேற்ப அருமையான சூழலில் அமைந்துள்ளது. இது சூரியனில் இருந்து வெகு தொலைவிலும் இல்லை. வெகு அருகிலும் இல்லை. அதனால்தான் பூமியின் மேற்பரப்பில் கடும் வெப்பமும் இல்லை. குளிரும் அதிகமாக தாக்குவதில்லை.

பூமியைச் சுற்றிக் காற்றுமண்டலம் உள்ளது. இதில் ஓசோன் படலம் என்ற அருமையான வசதி உள்ளது. இது சூரியனில் இருந்து வரும் மோசமான புறஊதாக்கதிர்களைத் தடுத்து விடுகிறது. நமக்குத் தேவையான அளவு வெப்பத்தையும், ஒளியையும் மட்டுமே பூமிக்கு அனுப்புகிறது.

பூமியின் மேற்பரப்பில் உள்ள சூடு, உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உண்டாக்குகின்றன. சூரியனின் கதிர்கள், தாவரங்கள் உணவு தயாரிக்க பயன்படுகின்றன.

பூமியில் சுமார் 92 வகையான தனிமங்கள் உள்ளன. இவற்றில் கார்பன் எனப்படும் கரி முக்கியமானது. உயிர்கள் அனைத்தும் கரியின் பல சேர்மங்களால்தான் உருவாகியுள்ளன. காற்று மண்டலத்தில் ஆக்சிஜனும், நைட்ரஜனும் உள்ளன. ஹைட்ரஜன் நீரில் இருந்து கிடைக்கிறது."

-  தினத்தந்தி இலவச இணைப்பு 22-7-2011, பக்கம்-3(வார இதழ்)

- எழுத்தாக்கம் :  செ.ர.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக