ஞாயிறு, 29 டிசம்பர், 2019

ரஷ்யா நோக்கி நகர்கிறது பூமியின் காந்த வடதுருவம்: விஞ்ஞானிகள் வியப்பு

மாஸ்கோ, டிச.20 பூமியின் காந்த வட துருவம், ரஷ்யா நோக்கி வேகமாக நகர்ந்து வருவது, புவியியல் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பூமியின் மேற் பரப்பில், வடதுருவம் உள்ளது. பூமியின் வடக்கு அரைகோளத்தில் சுழலும் அச்சும், மேற்பரப்பும் சந்திக்கும் முனை புவியியல் ரீதியாக, வடதுருவம் என அழைக்கப்படுகிறது.

ஆனால், பூமியின் காந்த வடதுருவம், இது அல்ல. பூமியின் காந்த வடதுருவம் என்பது காந்தப்புலத்தை பொறுத்து, புவி மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளி. இது காலத்தை பொறுத் தும், புவியியல் மாற்றத்துக்கும் ஏற்ப மாறுபடுகிறது. பூமியின் காந்த வடதுருவத்தின் அமைவிடம், கடந்த 1831ஆம் ஆண்டு முதல் கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் இருந்து ரஷ்யா நோக்கி, வேகமாக இடம்பெயர்ந்து வருவதாக புவியியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சமீபகாலங்களில், ரஷ்யாவின் சைபீரியா நோக்கி, ஆண்டுக்கு சராசரியாக, 54.7 கி.மீ., வேகத்தில்நகர்ந்துள்ளது, விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.பூமியின் காந்தபுலம், குறிப்பாக காந்த வடதுருவத்தை அடிப்படையாக கொண்டே, உலகளாவிய போக்குவரத்து கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. காந்த வட துருவத்தின் வேகமான இடப்பெயர்ச்சியால், நேட்டோ, அமெரிக்கா, பிரிட்டன் ராணு வங்கள், தங்கள் பயண திட்டங்களுக்கான உலக காந்த மாதிரியை குறிப்பிட்ட ஆண்டை விட, ஓராண்டு முன்னதாகவே மாற்றி புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வரும், 2020ஆம் ஆண்டுக்கான உலக காந்த மாதிரி தகவல்படி, காந்த வட துருவ பாதை அடுத்த சில ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் தான் இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

அதன் வேகம் சற்றே குறைந்து, இனி ஆண்டுக்கு சராசரியாக, 40 கி.மீ., என இருக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், 1831ம் ஆண்டு முதல் தற்போது வரை காந்த வடதுருவம் 2,253 கி.மீ., தூரம் பயணித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள விஸ்கன்சின் மேடிசன் பல்கலை புவியியல் விஞ்ஞானி பிராட் சிங்கர் கூறுகையில், ''பூமியின் காந்தபுலம் பலவீன மடைந்துள்ளதால் தான், காந்த முனை வேகமாக இடம்பெயர்கிறது.

பூமியின் உட்பகுதியில் ஏற்படும் புவியியல் மாற்றங்களால், காந்த புலமும் மாறுபடுகிறது. கடல் படிமங்கள், அன்டார்ட்டிக் மற்றும் ஆர்க்டிக் பனி கட்டிகள், எரி மலை லாவா மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பூமியின் காந்த புலத் தன்மை குறித்து ஆராயப்படுகிறது. எரிமலை குழம் புகள், காந்தப்புலம் கண்டறிய மிகவும் உதவுகின்றன.

காரணம், இதில், இரும்புத் தாதுக்கள் அதிகளவில் உள்ளன. ஆய்வில், பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

- விடுதலை நாளேடு, 20.12.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக