வெள்ளி, 20 டிசம்பர், 2019

அண்டவியல் உண்மை

பிரபஞ்சவியல் குறித்த 25ம் பதிவு .

நாம் நிகழ்கால பிரபஞ்ச எல்லைகளை எப்போதும் நாம் நிகழ்காலத்தில்புரிந்து கொள்ள முடியாது என்று கூறி இருந்தேன் அவை குறித்த கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

நமது பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் மணிக்கு 107000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது, அதுபோல் நமது சூரியனும் தனது கோள்களை இழுத்துக்கொண்டு மணிக்கு எட்டு லட்சத்து இருபத்தாராயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நமது நட்சத்திர கூட்டமான பால்வெளியின் மையத்தை சுற்றி வருகிறது.

சூரியன் ஒரு முறை தனது ஒரு சுற்றை முடிக்க 22 கோடி வருடங்கள் ஆகிறது அப்படியானால் சூரியன் தோன்றியது முதல் இன்று வரை அது 20 முறை மட்டுமே பால்வெளியின் மையத்தை சுற்றி வந்திருக்கிறது.

சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாக பூமி சூரியனை சுற்றி வருகிறது சூரியன் ஏன் பால்வெளியின் மையத்தை சுற்ற வேண்டும்?

பால்வெளி என்பது ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் பரப்பளவை கொண்ட மிக பிரமாண்ட நட்சத்திர தொகுதி இதில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்ல வினாடிக்கு 3லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் ஒளிக்கே ஒருலட்சம் ஆண்டுகள் ஆகும் என்றால் அது எவ்வளவு பெரியது என சிந்தியுங்கள்.

இவ்வளவு பெரிய நட்சத்திர கூட்டத்தின் மையத்தைத்தான் சூரியன் சுற்றி வருகிறது இந்த மையம் பூமியில் இருந்து 26000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து இருக்கிறது .

இந்த மையத்தில் அமைந்து இருக்கும் பிரமாண்டமான பிளாக்கோல்தான் ஒட்டுமொத்த பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துகிறது இதன் நிறை 42 லட்சம் சூரிய நிறையை கொண்டது.

இந்த மாபெரும் கருந்துளையை எப்போது கண்டு பிடித்தார்கள்? 1970 களில் பால்வெளியை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பால்வெளியை மிக வேகமாக சுற்றும் நட்சத்திரங்களை ஆய்வு செய்த போது இந்த நட்சத்திரங்களை இவ்வளவு வேகமாக சுழல வைக்கும் அளவுக்கு பலம் பொருந்தியதாக பால்வெளியின் நிறை இல்லை என்று கணக்கிட்டார்கள் எனவே நமக்கு தெரியாத ஏதோ ஒரு பெரும் நிறை இருக்கவேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது

நீங்கள் ஒரு கயிற்றின் முனையில் ஒரு கல்லை கட்டி மிக வேகமாக சுற்ற வேண்டுமானால் அந்த கல்லை விட நீங்கள் மிகவும் எடை அதிகம் கொண்டவராக இருக்கவேண்டும் .

உங்கள் எடை அந்த கல்லுக்கு நிகராகவோ குறைவாகவோ இருந்தால் அந்த கல் உங்களையும் தூக்கிக்கொண்டு போய்விடும்.

70 கிலோ நிறை கொண்ட மனிதன் ஒரு கிலோ நிறை கொண்ட கல்லை கயிற்றில் கட்டி சுழற்ற மிக கஸ்டப்படவேண்டும் இதுவே அரை கிலோவாக இருந்தால் சற்று எளிதாக இருக்கும்.

இதுபோல் ஒரு பெரு நிறைகொண்ட பொருளால்தான் இவ்வளவு பெரிய பால்வெளிமண்டல நட்சத்திரத்தை கட்டுப்படுத்தி தன்னை சுற்றிவர செய்யமுடியும்.

இந்த பிளாக்கோல் மட்டும் இல்லை என்றால் பால்வெளி என்பதே இல்லாமல் போய் இருக்கும்.

இந்த பால்வெளியை சமீபகாலமாக ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் பால்வெளி மண்டலம் ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இன்னொரு நட்சத்திர கூட்டத்துடன் மோதி ஒன்று கலந்து இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

ஏனென்றால் பால்வெளி மண்டலத்தின் நட்சத்திரங்கள் வேறு பட்ட மாதிரி பொருள்களை கொண்டதாக இருக்கிறது.

இளம் நட்சத்திரங்களும் வயதான நட்சத்திரங்களும் அவற்றில் உள்ள வேறுபட்ட அணுக்களும் அவை சுற்றும் கோணங்களும் இந்த மோதல் கருத்துக்கான சான்றுகளை வழங்கி இருக்கின்றன .

சரி விசயத்துக்கு வருவோம் இபோது இந்த பிளாகோலையோ பால்வெளியின் மையத்தையோ நாம் ஆய்வு செய்வதாக வைத்துக்கொள்வோம் நாம் நேரடியாக பால்வெளியை பார்த்து ஆய்வு செய்வதாக நமக்கு தோன்றும் .

ஆனால் 26000 ஆண்டுகளுக்கு முந்திய பால்வெளியைத்தான் நாம் உண்மையில் ஆய்வு செய்கிறோம், ஏனெனில் பால்வெளியில் இருந்து புறப்படும் ஒளி நம்மை வந்து சேர 26000 ஆண்டுகள் ஆகிவிடும்.

இந்த ஒளியை கொண்டுதான் பால்வெளியில் என்ன நிகழ்கிறது என நாம் அறிய முடியும் ஒளி பிரபஞ்சத்தின் தூதுவன் என நான்கூறியதின் காரணம் இதுதான்.

நாம் இன்றைய பால்வெளியின் மையத்தில் உள்ள பிளாக்கோலை தெரிந்து கொள்ள வேண்டுமானால் இன்னும் 26000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இன்று பால்வெளியில் என்ன நடக்கிறது என்பதை நாம் இன்றே தெரிந்து கொள்ளவே முடியாது

எனவே தூரம் அதிகம் ஆக ஆக நாம் பொருட்களின் துல்லியமான நிலையை நிகழ்காலத்தில் அறியவே முடியாது.

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டுதான் நவீன குவாண்டம் விதி நாம் எதையும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியாது அதேவேளை துல்லியத்துக்கு அருகில் செல்ல தோராயமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறது.

பிளக்கோல்; 200 ஆண்டுகளாக ஒரு கற்பனை அணுமானமாகவே இருந்தது.

1929களில் தனது 20வது வயதில் சந்திரசேகர் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் விதிகளின் அடிப்படையிலானகணக்கீடுகளின் அடிப்படையில் பிளாக்கோல் இருக்க வாய்ப்பிருப்பதை கூறினார்.

ஆனால் பொதுசார்பியலை உருவாக்கிய ஐன்ஸ்டீனோ சந்திரசேகரின் வழிகாட்டியான பேராசிரியர் ஆர்தர் எடிங்டனோ இதை நம்ப வில்லை அன்று புகழ் வாய்ந்தவானியலாள்ரான ஆர்தர் எடிங்டன் காட்டிய எதிர்ப்புணர்வின் காரணமாக சந்திரசேகர் தனது கல்வியை தொடர லண்டனில் இருந்து அமெரிக்கா சென்றுவிட்டார் .

சந்திரசேகரின் கணக்கீட்டிற்காக அவரின் வயதான காலத்தில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது நட்சத்திரங்கள் இறந்த பின் என்ன நிகழும் என்ற கணக்கீட்டிற்கு சந்திரசேகர் வரம்பு என்ற பெயரும் சூட்டப்பட்டது.

தொடரும்
- ஆர் சந்திரசேகரன் ஆர் சந்திரசேகரன் முகநூல் பதிவு, 20.12.19

[
 ](https://www.facebook.com/photo.php?fbid=607663269970453&set=a.156083961795055&type=3&eid=ARA05S8Dpz9Bf_I2LEG4tNJ6zKWTVXGqzB8F8tey0QWMoJW6XqNbKGtumBc9GOZMGpLRYVfOqiKiGCWa)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக