புதன், 20 ஜூன், 2018

தாவரங்கள் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனஅறிவியல் ஆய்வில் வெளியான விந்தையான தகவல்


இலைகளிடையே தொடுதல் மற்றும் மண்ணில் உள்ள வேதிப்பொருள்களைக் கொண்டு வேர்களின் மூலமாக தாவரங்கள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்கின்றன

அருகருகே அமைந்துள்ள தாவரங்கள் பூமிக்கு அடியில் வேர்களின் மூலமாக தொடர்புகொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்வதாகவும், பூமிக்கு வெளியேயும் அடுத்தடுத்து அமைந்துள்ள தாவரங்கள் கிளைகளை அசைத்து இலைகளின் தொடுதல் வாயிலாகவும் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன எனும் அறிவியல் ஆய்வுத் தகவல் ‘தி கார்டியன்’ (2.5.2018) இதழில் வெளியாகியுள்ளது.

நெருக்கமாக அமைந்துள்ள தாவரங்கள் வேர்களின் மூலமாக பூமிக்கடியில் மண்ணில் சூழலியலை உணர்த்தக்கூடிய வேதிப்பொருள் களைக் கொண்டு, தாவரங்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்றங்களைச் செய்துகொள்கின்றன எனும் வியத்தகு ஆய்வுத்தகவல் வெளியாகியுள்ளது.

அதிக நெருக்கமான இடங்களில் வளர வேண்டிய நிலையில் தாவரங்கள் வளர்வதற்கு அத்தியாவசியமான சூரிய ஒளியைப்பெற்றிட நிழல்களால் மறைக்கப்படாமல் இருக்க, மண்ணில் உற்பத்தியாகின்ற வேதிப்பொருள் களைக் கொண்டு வேர்களின் வாயிலாக தகவல் பரிமாற்றங்களைக் கொண்டு தாவரங்கள்  அடுத்தடுத்து இடையூறின்றி வளருகின்றன.

சுவீடன் விவசாய அறிவியல் பல்கலைக்கழகம் ஆய்வு

உப்பசாலாவில் உள்ள சுவீடன் விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்  வெளேமிர் நிங்கோவிக் கூறியதாவது:

மனிதர்களாகிய நாம் அண்டை வீட்டாருடன் பிரச்சினை ஏற்படும்போது, அந்த குடியிருப்புப் பகுதியை விட்டு விலகியிருக்க முடியும். ஆனால், தாவரங்களால் அதுபோல் செய்ய முடியாது. இருக்கும் இடத்தை ஏற்றுக்கொண்டு, பிற தாவரங்களிடையே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய போட்டியைத் தவிர்க்கும் வண்ணம் தேவையான சமிக்ஞை களை பரிமாறிக்கொள்கின்றன.

தாவரங்களின் இலைகள் ஒன்றுடன் ஒன்று   தொடுதலின்மூலமாக கிளைகள் மற்றும் இலைகள் வளர்வதற்கான வியூகங்களை வகுத்துக் கொள்கின்றன எனும் கருத்து, ஆய்வுகளின் மூலமாக வெளியாகி யுள்ளது.  நன்கு வளர்ந்த மரங்கள் அவற்றின் உள் வளையங்கள் மூலமாக அதன் காலத்தை அறிந்து கொள்ளலாம். வளர்ந்த மரங்களை யடுத்த மற்ற தாவரங்கள் வேறு திசையில் திரும்பிடும் வேர்கள் மூலமாக தங்களை வளர்த்துக்கொள்கின்றன.

அண்மையில் வெளியாகியுள்ள ஆய்வு களின்படி, தாவரங்களின் இந்த குணங்கள் தெரியவந்துள்ளன. வெறுமனே வேர்கள் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மட்டுமல்லாமல், மண்ணில் உற்பத்தியாகின்ற வேதிப்பொருள்களின் மூலமே தாவரங்கள் எப்படி வளர்கின்றன என்பது தீர்மானிக்கப் படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிளாஸ் ஒன் இதழ்

பிளாஸ் ஒன் (றிறீஷீs ஷீஸீமீ) இதழ் வெளியிட்ட ஆய்வுத்தகவலின்படி, மிக நெருக்கமாக பயிரிடப்பட்ட மக்காச்சோளம் அதிகமாகவே வளர்ச்சி பெற்றன. தாவரங்களின் இலைகளை நாள்தோறும் ஒரு நிமிட காலத்துக்கு பிரஷ் கொண்டு அருகருகேயுள்ள தாவரங்களின் இலைகளுக்குள் தொடுதல் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. நிங்கோவிக் மற்றும் அவருடன் பணியாற்றும் ஆய்வாளர்கள் இதனைத் தொடர்ச்சியாக செய்து வந்தார்கள். அதன்பின்னர் அத்தாவரங்களை எடுத்து வேறு இடத்தில் நட்டனர். அப்போதும் அத்தாவரங்களின் வளர்ச்சியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இலைகள் கூடுத லாகவே வளர்ச்சி பெற்றதுடன், வேர்களும் வளர்ந்ததை கண்டனர். அதேநேரத்தில் தொடுதலின்றி பயிரிடப்பட்ட பிற தாவரங்கள் இத்தாவரங்களைப்போன்ற வளர்ச்சியை எட்டவில்லை.

தாவரங்கள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன என்பது வெளி யானது. தாவரங்களின் அருகிலுள்ள தாவரங்கள் வெட்டப்படுகின்ற போது, 1980களில் ‘டபிள்யூ அலைகள்’ (கீ ஷ்ணீஸ்மீs) எனப்படுகின்ற  மின் அலைகளை மரங்கள் வெளியிடுவதாக கருத்து வெளியானது.

அண்மைக்காலமாக வெளியாகியுள்ள புதிய ஆதாரங்களின் மூலமாக தாவரங் களிடையே தொடர்ச்சியாக சமிக்ஞைகளை அனுப்புவதும் பெறுவதும் தெரிய வந்துள்ளது. தாவரங்களின் சமிக்ஞைகளை உணர்ந்திடும் முயற்சிகளில் அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரங்களின் வயதை காட்டுகின்ற இழை களைப்போன்ற உள்வளையங்கள் மற்றும் மரங்களின் மீதான சேதங்கள், பூஞ்சைகளால் ஏற்படுகின்ற நூலிழை இடைவெளிகள் என அனைத்தும் வேர்களுடன் தொடர்புள்ளவை யாக இருந்து வந்துள்ளன. தாவரங்களைச் சுற்றி அமைகின்ற புதிய தாவரங்கள்குறித்து கூட்டு தகவல் தொடர்புகளின் வாயிலாக தாவரங்கள் அறிந்துகொள்கின்றன என்பது ஆய்வுகளின் மூலமாக தெரியவந்துள்ளது.

பன்னாட்டளவில் அறிவியல் ஆராய்ச் சிகள் மேலோங்கி வருகின்றன. தாவரங் களுக்கும் உயிர் உள்ளது. தாவரங்களுக்கும் உணர்வுகள் உள்ளன. தாவரங்களும் தங் களுக்குள் தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்கின்றன என்கிற ஆய்வுகள் வெளியாகி வருகின்றன.

தாவரங்கள் தங்களின் வளர்ச்சிக்கான சூழலை அருகிலுள்ள தாவரங்களுடன் உரிய தகவல் பரிமாற்றத்துடன் செழுமையாக வளர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன என்று ஆய்வுத்தகவல் உறுதிப்படுத்தியுள்ளன.

இயற்கைக் கூறுகள்

இயற்கையில் தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள், அனைத்துண்ணிகள் என வகைப்படுத்தப்பட்ட நிலையில், மனிதப் பெருக்கத்திற்கு ஏற்ப, உணவு உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்றிட வேண்டும். பன்னாட் டளவில் மரக்கறி, இறைச்சி உணவு உள்ளிட்ட உணவு முறைகள் அறிவியல் முறையின்படி, மருத்துவ ஆலோசனைகள், தேவைகளின்படி இருக்க வேண்டுமே ஒழிய, பழக்க வழக்கம், மதம், கடவுள் உள்ளிட்ட காரணங்கள் உணவுப்பழக்கத்தில் இருக்கக்கூடாது.

இன்ன உணவைத்தான் இன்னார் உண்ண வேண்டும் என்கிற கட்டாயம் ஆட்சி அதிகாரத்தின் பெயரால், மதத்தின் பெயரால் திணிக்கப்படக் கூடாது.   அப்படி திணிப்பது அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் உண்ணும் உரிமையை பறிப்பதாகும்.

மத்தியில் ஆளும் பாஜகவோ நாட்டில் ஆய்வுமாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை அளிக்க மறுப்பதால், வெமு லாக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். அறிவி யலுக்குப் புறம்பான கருத்துகளை அமைச் சர்கள் தொடங்கி பிரதமர் என அனைத்து பாஜக தலைவர்களும் கூறிவருகின்ற ஆபத்தான போக்கு தொடர்ந்து கொண்டிருக் கிறது. பசு மாட்டை கோமாதா என்று கூறி மனிதக் கொலைகள் நடக்கின்றன.

அறிவியலுக்கு முட்டுக்கட்டை போட்டு மூடத்தனங்களைக் கைக்கொள்பவர்களால் ஏற்படுகின்ற இன்னல்களை இந்த நாடே சந்தித்து வருகிறது.

புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு மாட்டு மூத்திரத்தை சர்வரோக நிவாரணியாக இந்துத்துவாவாதிகள் கூறுகின்றனர். கோமாதா என்று  கூறி கோசாலைகள் அமைக்கின்றனர். மனிதர்களைவிட  மாடுகள்மேல் அக்கறை கொண்டுள்ளதாக காட்டிக்கொள்கின்றனர்.

மாட்டின் இறைச்சி, தோல், எலும்பு உள்ளிட்ட மாடு சார்ந்த பொருள்கள் (ஙிஷீஸ்வீஸீமீ றிக்ஷீஷீபீuநீts) பல்வேறு துறைகளில் பன்னாட் டளவில் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், இந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்ற நிலையில், இந்த நாட்டு மக்களை மாட்டிறைச்சியின் பெயரால் வாட்டி வதைக்கின்ற அவலம் தொடர்ந்துகொண்டி ருக்கிறது.

எந்த உயிரினமும், அதே இனத்தை அழிக்க முற்படுவதில்லை. தாவரங்கள்கூட தங்கள் வளர்ச்சிக்குரிய தகவல் பரிமாற்றங்களைக் கொண்டிருக்கும் போது, மனிதன் மட்டும் மதப்பித்து பிடித்து மாய்வானேன்? மதவெறி மாட்டிறைச்சி அரசியல் மனிதனை சாகடிப்பானேன்?                  - ந.கதிரவன்

-  விடுதலை ஞாயிறு மலர், 19.5.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக