ஞாயிறு, 8 நவம்பர், 2015

புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு



உலகம் முழுவதும் 18 ஆயிரம் புதிய உயிரினங்களை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில், பூனையை போன்ற கரடியும், தரைக்கு கீழ், 3,000 அடிக்கு கீழ் இருக்கும் கண்ணில்லாத நத்தையும் அடங்கும். இதுகுறித்து, நேஷனல் மியூசியம் ஆப் நேச்சுரல் சயின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் உயிரியல் விஞ்ஞானி, அண்டோனியோ வால்டேகேசஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கூறியதாவது:  உலகில் 20 லட்சம் உயிரினங்கள் இருப் பதாகவும், இவற்றில் தற்போது 18 ஆயிரம் உயிரினங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இன்னும் 1 கோடி உயிரி னங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள் ளது. அவற்றில் பல அழிவின் விளம் பில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
-விடுதலை ஞா.ம.9.8.14

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக