வெள்ளி, 31 அக்டோபர், 2025

மருத்துவத்தில் ஒரு மைல் கல் இதயம், கல்லீரல் உள்ளிட்ட மனித உறுப்புகளை செயற்கையாக உருவாக்கினர் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

 


வாசிங்டன், அக்.3 அமெரிக்க காவின் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதயம், கல்லீரல், ரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வறிக்கை முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப் பதாவது: ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை இதயத்தை உருவாக்கும் ஆராய்ச் சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறோம்.

இதன்படி 16 நாட்களில் எங்களது ஆய்வில் செயற்கை இதயம் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கை இதயம்,மனித இதயத்தை போன்று துடிக்கிறது. இதேபோல செயற்கை கல்லீரலையும் உரு வாக்கி உள்ளோம். மேலும் செயற்கை ரத்த நாளங்களையும் உருவாக்கி இருக்கிறோம். எங்கள் ஆராய்ச்சியின் மூலம் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 03.10.25

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக