வெள்ளி, 24 ஜனவரி, 2020

நட்சத்திர மோதல் கிளப்பிய அலை!

இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதி ஒன்றானபோது, காலவெளியில் ஏற்பட்ட புவியீர்ப்பு அலைகளை, அண்மையில் விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள, 'லிவிங்ஸ் டன் லிகோ ஆராய்ச்சி நிலையம், இந்த புவியீர்ப்பு அலைகளை கடந்த ஏப்ரல் 2019இல் பதிவு செய்துள்ளது.

பூமியிலிருந்து, 52 கோடி மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த மோதலும் இணைப்பும் நிகழ்ந்துள்ளது. இணைந்து உருவாகிய புதிய நியூட்ரான் நட்சத்திரம் சூரியனைவிட, 3.4 மடங்கு நிறை கொண்டது என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்

அண்டவெளியில் இரண்டு பெரிய கோள்கள், நட்சத்திரங்கள் மோதும் போது, சுற்றியுள்ள காலவெளியில் அலைகள் ஏற்படுகின்றன. இவற்றை விண்வெளி ஆய்வாளர்கள் புவியீர்ப்பு அலைகள் என்று அழைக்கின்றனர். ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்த அலைகள் பூமியை வந்து அடையும் போது, அவற்றை சில கி.மீ., நீளமுள்ள, 'லிகோ' என்ற கருவி மூலம் அளக் கின்றனர்.

ஏற்கனவே, 2015 முதல், சில டஜன் புவியீர்ப்பு அலைகளை, உலகில் சில நாடுகளில் உள்ள லிகோ கருவி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

- விடுதலை நாளேடு 23 1 20

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக