
ஞாயிறு, 28 ஜூலை, 2019
பால்வெளி மண்டலத்தில் பூமிக்கு அருகில் 28 புதிய வகை விண்மீன்கள் : இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வியாழன், 4 ஜூலை, 2019
செவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள பூமியின் ஆதிகால உயிரிகள்
சில தாவரங்கள் மிக கடுமையான சூழலிலும் வாழக் கூடியவை. ஆக்சிஜனே இல்லாத நிலையிலோ அல்லது மிகவும் அதிக வெப்ப நிலையிலோ உயிர்வாழக் கூடியவை யாக அவை உள்ளன.
தாவரங்களின் தாக்குபிடிக்கும் தன்மையானது, பருவநிலை மாற்ற சூழ்நிலை நமது உணவு உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது பற்றியும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் எப்படி தகவமைப்பு செய்து கொள்ளும் என்பது பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஒன்றைவிட மற்றொரு தாவரம் அதிக தாக்குபிடிக்கும் தன்மை கொண்டது என எப்படி அமைகிறது?
இதற்கான பதிலை கண்டறிவதற்கு தாவரவியலாளரும் பிபிசி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வோங் முயற்சி மேற்கொண்டார். அப்போது நமது பூமியின் கடினமான தாவரங்களின் வினோதமான மற்றும் ஆச்சர்யத்துக்குரிய உண்மைகளை அவர் கண்டறிந்தார்.
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற கடினமான இரண்டு தாவர வகைகளை ஜெர்மனி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர்.
சுவிட்சர்லாந்து மற்றும் அண்டார்டி காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கற்பாசிகள் மற்றும் நீலப்பசும் பேக்டீரியா என்ற இரண்டு உயிரிகளாக இருப்பதால் இதில் ஆச்சர்யம் ஏதும்இல்லை.
இந்த ஆதிகால தாவரங்கள் அதில் உயிர்வாழ முடியுமா என பரிசோதனை செய்வதற்காக - கடுமையான சூரிய வெப்பம், வெப்ப நிலையில் ஏற்ற இறக்கங்கள், அதிக அளவிலான உலர்ந்த நிலை மற்றும் குறைவான காற்றழுத்தம் - போன்ற செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலைகளை ஆராய்ச்சியா ளர்கள் உருவாக்கினர்.
என்ன முடிவு கிடைத்தது? இந்தத் தாவர இனங்கள் உயிர் பிழைத்திருந்தது மட்டுமின்றி, ஒளிச் சேர்க்கை செய்தல் மற்றும் வழக்கமான தாவர செயல்பாடுகள் தொடர்ந்து நடக் கின்றன என்பதைக் கண்டறிந்தார்கள்.
- விடுதலை நாளேடு 4. 7 .19