புதன், 19 ஜூலை, 2017

உயிர்தோற்றம்

#

இரு பெரும் கற்கள் மோதி உண்டான நமது ஞாயிற்றுதொகுதி அந்த விசையாலும் காந்தபுலம் திணிவு அடர்த்தி ஈர்ப்புவிசை போன்ற சக்திகளாலும் சூரிய ஈர்ப்புவிசையால் உந்தப்பட்டு கோள்கள் சீரான நீள்வட்டப்பாதையில் சீரான வேகத்தில் தன்னைதானே சுற்றி சூரியனையும் சுற்றிவருகின்றன.
ஒவ்வொரு கோள்களின் ஈர்ப்புவிசையால் உந்தபட்டு துணைகோள்கள் உருவாகின.
(நியூட்டனின் 1ம் விதி)

இவ்வாறு ஞாயிற்றுதொகுதி உருவாகியபிறகு பூமியில் உயிர்கள் தோன்றகூடிய தட்பவெட்ப நிலை உருவாகிறது.
அதைபற்றி விரிவாக பார்ப்போம்.

தொடக்க நிலையில் பூமி வாயுக்களையும் (Gases) தனிமங்களின் (Elements) ஆவியையும் கொண்டு ஆவி நிலையில் இருந்தது. காலப்போக்கில் அவை குளிர்ச்சி அடைந்தன. தனிமங்களின் எடைக்கேற்ப பூமியின் மையப்பகுதிக்கும் (Core) கவசப் பகுதிக்கும் (Mantle) அவை சென்றடைந்தன.
எடை குறைவான வாயுநிலை தனிமங்களான ஹைட்ரஜன் (H2) ஓக்சிஜன் (O2) நைட்ரஜன் (N2) கரி (C) ஆகியன வாயு நிலையில் அன்றைய பூமியின் வளிமண்டலமாக இருந்தன. இவை மேலும் குளிர்ச்சியடைந்துவரும்போது இந்த நான்கு தனிமங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இணைந்தன. ஹைட்ரஜன் தனிமம் செயல்திறன்மிக்கது ஆதலால் அதன் அணுக்கள் ஏனைய அணுக்களுடன் சேர்ந்தன. விளைவு அணுக்கள் மூலக்கூறுகளாயின. (2H2+O2 > 2H2O - நீராவி)
(3H2+N2 > 2NH3 - அமோனியா)
(C+2H2 > CH4 - மெதேன்)

நீராவி உருவாகியதால் மழை உருவானது  ஆனால் பூமி அதிக வெப்பநிலையிலையே இருந்ததால் வீழ்ந்த மழைதுளிகள் மீண்டும் நீராவியாகின. இருப்பினும் பூமி தொடர்ந்து குளிர்ச்சியடைந்துகொண்டே இருந்ததால் பொதியளவிற்கு குளிர்ச்சியடைந்து பூமியில் வீழ்ந்த மழைதுளிகள் பூமியிலேயே நீராக தங்கின. இதனால் நதிகள் ஏரிகள் கடல்கள் போன்ற நீர்பகுதிகள் உருவாகின.

அன்றைய வளி மண்டலத்திலிருந்த ஹைட்ரஜன், அமோனியா, நீராவி, மெதேன் [H2, NH3, H2O, CH4] ஆகியவற்றிடையே வெப்பம், மின்னல், சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக்கதிர்கள், ஆகியவற்றின் செயல்களால் வேதியல் செயல்கள் நடைபெற்றன. அதன் பயனாக, குளூக்கோஸ் என்ற சர்க்கரைப் பொருட்கள், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகள் (Organic Molucules) அன்றைய காற்று மண்டலத்திலே உண்டாகின. பின்னர் காற்று மண்டலத்திலிருந்து மழையால் அவை கடலுக்குக் கொண்டு வரப்பட்டன. கனமான மூலக்கூறுகளாவன கடலுக்கடியில் சென்றன. வீழ்படிவாக படிந்தன. [Precipitated].

கடலில் இவற்றிடையே ஏற்பட்ட வேதியல் செயல்களால் இவற்றிலும் பெரிய மூலக்கூறுகளாகிய ஸ்டார்ச் [Starch] புரதம், கொழுப்பு, அமிலங்கள் [Fatty Acid] நியூக்ளிக் அமிலம் [Nucleic Acid]
போன்ற கூட்டுப்பொருட்கள் உருவாகின. இத்தகைய பொருட்கள் உருவாகியதன் விளைவாக அமீபா போன்ற ஒரு செல் உயிரிகள் உண்டாயின. பின்னர் அதிலிருந்து பல செல் உயிரிகள் தோன்றின. அவை பல கோடி ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்தன/அடைந்துகொண்டு இருக்கின்றன.

இவற்றைபற்றி தெரியாத படிப்பறிவற்ற பழங்குடிகளுக்கு கடவுள் உலகை படைத்தார் எனும்போது நம்பினார்கள். ஆனால் இன்றும் அதையே நம்புபவர்களை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இதற்கு காரணம் எமது சந்ததிகளுக்கு நாம் அறிவியலை போதிப்பதைவிட கடவுளை போதிப்பதே அதிகமாக இருப்பதால். பாடசாலைகளில் இருந்து மதங்களை தூக்கிவிட்டு இவற்றை படிப்பிக்கவேண்டும். ஆனால் எமக்கு பின்னால் இருக்கும் மத அரசியல் அதை செய்யவிடாது.
ஆனால் நாம் எமது ஆறாம் அறிவை கொஞ்சம் பயன்படுத்தலாமே.

#SharePlease #VenuGopaalaShanger
#ஆறாம்அறிவு
-முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக